ஆய கலைகள் அனைத்தும் அடக்கிய அதிசய பூமி நம் பாரதம் 
தூய பல உள்ளங்கள் கண்ட புண்ணிய  பூமி நம் பாரதம் 
பெருமை ,புகழ் பல கொண்ட பொன் பூமி நம் பாரதம் 
அருமையுடன் நாம் போற்ற வேண்டிய அற்புத பூமி நம் பாரதம் 
விழாக்கள் பல காணும் விந்தையான பூமி நம் பாரதம் 
நிழல் தந்து நம்பி வந்த அந்நியரையும் அணைக்கும் அன்பு  பூமி நம் பாரதம் 
பொறுமையுடன் போராடி விடுதலை கண்ட வீர பூமி நம் பாரதம் 
இறுமாப்புடன் நம்மை தலை நிமர செய்யும் தாய் திருபூமி நம் பாரதம்
அறிவுக்கு சி வி ராமனையும் ஆஸ்கருக்கு ரெஹமானையும் 
அளித்த ஆற்றல் மிக்சு பூமி நம் பாரதம் 
வாழ்க வாழ்க என்று  வாழ்த்தி 
வணங்கிடுவோம் வளமை மிக்க  நம் பாரதம்  
No comments:
Post a Comment