Thursday, August 13, 2026

 கடுகு பொறியும் வேளையில் கவிதை இயற்ற நான் கம்பனுமில்லை ,

அடுக்கு சொற்களால் அலங்காரமாக பாக்கள் இயற்ற பாரதியுமில்லை குமுதினியை கும்பிட்டு அருள் பெற்ற கூத்தனுமில்லை ,

குவலயம் கொண்டாடும் கவி காளிதாசனுமில்லை, 

வெண் தாமரை வேணியின் அருள் வேண்டும் பலரில் ஒருத்தி நான் ,

உள்ளத்தில் உதிக்கும் எண்ணச்சிதறல்கள் 

வெள்ளைத்தாளில் வெளிப்பட்ட கவிதைத் துளிகள்

 ஆண்டவனின் அற்புத படைப்புக்களைக் காணக் காண ஆனந்தம் ஆயிரம், 

 எண்ணிலடங்கா பட்டியலின் சில துளிகளை எழுதிப்பகிர்வதில் ஒரு ஆனந்தம் , 

பெற்றெடுக்கும் வேளையில் பிறந்த குழந்தையின் அழுகையே தாய்க்கு ஆனந்தம், 

பிறந்த குழந்தைக்கு தாயின் அரவணைப்பே ஆனந்தம் . 

பிள்ளையின் மழலையும் குறுஞ்சிறுப்பும் பெற்றவர்க்கு ஆனந்தம் 

கள்ளமில்லா குழந்தயைக் காண கடவுளுக்கே ஆனந்தம் . 

பள்ளி சிறார்க்கு விளையாட்டில் ஆனந்தம் , 

கல்லூரி காளைக்கோ கன்னிப் பெண்ணின் கடை பார்வையே ஆனந்தம்.

திறன் பெற்ற பேச்சாளர்க்கோ மக்களின் கரவொலி ஆனந்தம் , 

அறநெறி செல்லும் பக்தனுக்கோ ஆண்டவன் நாம ஒலியே ஆனந்தம் .

 மண்ணில் விளைந்த மரங்களுக்கோ மலர்கள் பூத்தால்ஆனந்தம், 

மண்ணை பொன்னாக்கும் உழவனுக்கு விளைந்த பயிரைக் கண்டால் ஆனந்தம் . வண்ணத்தோகை விரித்தாடும் அழகு மயிலுக்கு வானம் கறுத்தால் ஆனந்தம் , இன்னிசை பாடும் கருங்குயிலுக்கு கதிரவனைக் கண்டால் ஆனந்தம் . 

உழைத்து உண்ணும் மனிதனுக்குத் தன் உறுதியை கண்டு ஆனந்தம், 

 களைத்துக் கண்ணயரும் தருணத்தில் நிம்மதியான உறக்கமே ஆனந்தம் . இல்லத்தை பேணும் மனைவிக்கு கணவனின் இன்சொல்லேஆனந்தம், இல்லத்தரசியை பேணும் கணவனுக்கு அவளின் புன்னகையே ஆனந்தம் . கடமைகளை முடித்து உடல் தளர்ந்த முதுமையில் ஓய்வு ஆனந்தம் , 

 உடனிருக்கும் இனிய நினைவுகளை எண்ணிப்பார்க்கையில் இதயத்திற்கு ஆனந்தம் . 

இருக்கும்வரை இனிய வாழ்க்கை வாழும் மனிதனுக்கு பிறப்பே ஆனந்தம் ,

இறுதி நாட்களில் நோயுடுன் போராடும் மனிதனுக்கு மரணமே ஆனந்தம்

Friday, July 10, 2026

  8th december, 2025

காஞ்சி நகரத்தில் பிறந்தவன் 

காக்கும் கடவுளின் பெயர் பெற்று வளர்ந்தவன் 

கோவை நகரத்தில் இளமையைக் கழித்தவன் 

காவேரி நீரில் இறுதியில் கரைந்தவன் 

காஞ்சிக்கும் காவேரிக்குமிடையே எழுபத்தாறாண்டு 

கடமை முடிந்ததெனக் கண் மூடிய இவ்வாண்டு 

ஞாலம் காப்பவனை வணங்க மறுத்ததுண்டு 

ஞானியென வாழ்ந்த பெருமை அவனுக்குண்டு 

நிம்மதியான உறக்கம் விழைந்து சென்றான் 

நினைவுகளின் ஊர்வலத்தில் நிறைந்து நின்றான் 

முடிந்து போன முப்பது நாட்கள் 

முடியாமல் தொடரும் எழுத்துத் துளிகள்  

முரண்டு பிடிக்கும் எண்ணங்கள் 

முற்றுப் புள்ளி மறந்த என் வரிகள் 


 On 6 th december 2025,

A dedication to my dear brother who was everything to me. 

முப்பது நாட்களுக்கு முன் சொல்லப்பட்ட ஒரு தீர்ப்பு , 

முழுமையாக வாதிடாமல் முடிந்து விட்ட ஒரு வழக்கு , 

இறைவனவன் தீர்ப்புக்கு மறு தீர்ப்பு அவனிடமேயில்லை , 

இயலாமையில் தவிக்கும் மனதிற்கு மருந்தும் நம்மிடமில்லை.

வேண்டுதலெனும் கரங்கள் கொண்டு மீட்க இயலவில்லை , 

வேண்டுதலெல்லாம் நிறைவேறினால் மனித வாழ்வில் மரணமில்லை 

விருப்பமின்றி விடை கொடுத்தோம் வேறு வழியில்லை 

விதிக்கப்பட்ட தொரு நிகழ்வு இறப்பென்பது புரியாமலில்லை 

மழை நின்றும் தூறலை நிறுத்த மறந்த மேகம் 

மடை திறந்த வெள்ளமென நினைவுகளில் சுழலும் மனம் 

புயல் கடந்ததால் நிலை குலைந்த வழிப் (வாழ்வுப் ) பாதைகள் 

பாதையில் பூத்திருப்பதோ கணக்கற்ற கண்ணீர்ப் பூக்கள்

 கண்ணீர்ப் பூக்களைப் பறித்துத் தொடுக்கிறேன் 

காணிக்கையாக்கி (உனக்கு ) நிதமொரு மாலை சூட்டுகிறேன்


 Hands of clock slowly moving, 

Hour by hour days are rolling , 

Walls of my house still waiting, 

Wanting to hear that voice of yours echoing. 

Ears are longing for that ringtone to be heard, 

Thoughts lining up in queue to be shared, 

Tears rolling down drying up the eyes, 

Heart but remembering you with silent cries . 

You always believed in Superpower, 

You only can ask now, was this all fair? 

For being so noble and kind , 

For all that warmth, why this painful end. 

Clutches of destiny so cruel, 

Heartless and mindless as well, 

Made all our efforts go futile, 

Left behind only helplessness as a trail. 

A Picture so perfect, 

Destroyed by hands of fate.

Long way to go for us to forget, 

Lines of life written on HIS UNERASABLE SLATE. , 


 For a dear brother who gave us endless support 

For a dear father who gave his family immense strength 

------------------------------------------------ 

Never did he grumble on loosing his spouse 

Nor did he grunt on having the deadly disease 

One opening the door for a new life 

Other opening the way for a new end 

Never did he forget his sense of humor 

Nor did he lose hope fighting the cancer tumor 

Dear to all, never failed to stretch his helping hand 

Death grabbing him away with its cruel mind 

Long miles to go for us to accept this unpleasant fate 

Life’s chapter written on an unerasble slate. 

A noble and beautiful soul he was 

Never deserving this end as it was 

God, though great in his judgements 

Gives at times wrong punishments 

மாய இவ்வுலகில் மனிதன் நிரந்தரமில்லை  

மனிதனைத் தரம் பார்க்கும் தகுதி மரணத்திற்கில்லை

 வெண் தாமரை தேவி வான்மயி போற்றி,

நான் முகன் நாவில் உறை வித்யாவதியே போற்றி,

சத்யலோகத் தாயே சரஸ்வதி போற்றி,

வேதங்களின் தலைவியே வாகீஸ்வரியே போற்றி (வெண் தாமரை தேவி)

கலைகளின் அதிபதியே கலாவதியே போற்றி,

கல்வி தந்தருளும் கலைமகளே போற்றி,

கூத்தனுரில் குடியிருக்கும் குமுதினியே போற்றி,

கூத்தரை ஆட்கொண்ட கமலினியே போற்றி, (வெண் தாமரை தேவி)

வீணை ஏந்தும் பங்கஜ வேணியே போற்றி,

கான ஸ்வரூபிணியே கல்யாணியே போற்றி

தேன் தமிழில் பாடலை எழுதி நான் பாட ,

 திறனொன்று எனக்களித்த சாரதையே போற்றி , (வெண் தாமரை தேவி)


Saturday, February 7, 2026


                   வீடு

கல்லும் மண்ணும் கலந்து கட்டியதோர் வீடு,

நல் வாழ்வு வாழ்ந்ததற்கோர் இலக்கணம் அதில் உண்டு, 

வாசலில் வழிபட்டு புகுந்ததோர் வீடு,

சுவாசிக்கும் காற்றோ கதைகள் பல சொல்வதுண்டு ,

அறை, கதவு, தூண்,என்ற அம்சங்கள் கொண்ட வீடு,

நிறைவான எண்ணங்களை நினைவில் நிரப்பும் நிலை கண்டதுண்டு,

கண்ணெனக் கருத்தில் கொண்டு பேணிக் காத்ததோர் வீடு,

வண்ண ஓவியமென வாழ்வுதனை வடிவமைத்த சிறப்பும் அதற்குண்டு ,

எழிலுடன் அலங்கரித்துக் களித்ததொரு வீடு,

அழகிய நாட்கள் பலவற்றின் அடையாளம் அதிலுண்டு ,

ஆயிரம் ஆயிரம் சேர்த்து செலவழித்து அருமையுடன் வாழும் வீடு,

உயிர் வாழும் மனிதனின் உற்ற துணையில் ஒன்றெனப் பெருமையும் பெற்றதுண்டு

Tuesday, April 1, 2014

                       என் ஓய்வு  நாள் கவிதை......மார்ச் 30,2013

உறவு என்றொரு சொல்லுக்கு பிரிவு என்றொரு பொருளையும்
உழைப்பு என்றொரு கதைக்கு ஓய்வு என்றொரு முடிவையும்
எழுதி வைத்தானே அந்த இறைவன்
சுழலும்  வாழ்கை சக்கரத்தின் ஓட்டத்தை யாரால் மாற்றி அமைக்க இயலும்

என் இனிய லோதி பள்ளியே
உன்னுடன்  இருந்த இந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில்தான்
எத்தனை எத்தனை இனிமையான இறந்த கால நினைவுகள்
அத்தனையும் என் வருங்காலத்தின் சுவையான வரவுகள்

அழகிய பல பள்ளி விழாக்களை காண வைத்தாய்
பழக பல பண்பான தோழிகளை தந்து உதவினாய்
செயல் திறமை வெளிப்பட வாய்ப்புக்கள் வழங்கி ஊக்குவித்தாய்
பெயர் புகழ் பெற பாதை தன்னை திறந்து வைத்தாய்

எனக்குப் பிடித்த கணிதப் பாடத்தை கற்பிக்க வைத்தாய்
கனவில்தான் காண இயலும் எனக் கருதிய
கணிணிப்  பொறியினை கையாளும் கலையை
கற்கண்டென கற்றுணர வைத்தாய்

வானப் பெண்ணின் நாணப் புன்முறுவலான வானவில் போல
என் வாழ்வில் வண்ணங்களை தீட்டினாய்
உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என் நினைவை விட்டு என்றும் நீ நீங்கப் போவதில்லை



Sunday, December 20, 2009

kadughu #15

ஒரு நொடியில் இந்த உலகத்தை அழகாக்குவதில்
அந்த இறைவனை விட உயர்ந்தது
                                                      காதலன்/ காதலி பார்வை