Tuesday, April 1, 2014

                       என் ஓய்வு  நாள் கவிதை......மார்ச் 30,2013

உறவு என்றொரு சொல்லுக்கு பிரிவு என்றொரு பொருளையும்
உழைப்பு என்றொரு கதைக்கு ஓய்வு என்றொரு முடிவையும்
எழுதி வைத்தானே அந்த இறைவன்
சுழலும்  வாழ்கை சக்கரத்தின் ஓட்டத்தை யாரால் மாற்றி அமைக்க இயலும்

என் இனிய லோதி பள்ளியே
உன்னுடன்  இருந்த இந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில்தான்
எத்தனை எத்தனை இனிமையான இறந்த கால நினைவுகள்
அத்தனையும் என் வருங்காலத்தின் சுவையான வரவுகள்

அழகிய பல பள்ளி விழாக்களை காண வைத்தாய்
பழக பல பண்பான தோழிகளை தந்து உதவினாய்
செயல் திறமை வெளிப்பட வாய்ப்புக்கள் வழங்கி ஊக்குவித்தாய்
பெயர் புகழ் பெற பாதை தன்னை திறந்து வைத்தாய்

எனக்குப் பிடித்த கணிதப் பாடத்தை கற்பிக்க வைத்தாய்
கனவில்தான் காண இயலும் எனக் கருதிய
கணிணிப்  பொறியினை கையாளும் கலையை
கற்கண்டென கற்றுணர வைத்தாய்

வானப் பெண்ணின் நாணப் புன்முறுவலான வானவில் போல
என் வாழ்வில் வண்ணங்களை தீட்டினாய்
உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என் நினைவை விட்டு என்றும் நீ நீங்கப் போவதில்லை



No comments: