Friday, July 10, 2026

 On 6 th december 2025,

A dedication to my dear brother who was everything to me. 

முப்பது நாட்களுக்கு முன் சொல்லப்பட்ட ஒரு தீர்ப்பு , 

முழுமையாக வாதிடாமல் முடிந்து விட்ட ஒரு வழக்கு , 

இறைவனவன் தீர்ப்புக்கு மறு தீர்ப்பு அவனிடமேயில்லை , 

இயலாமையில் தவிக்கும் மனதிற்கு மருந்தும் நம்மிடமில்லை.

வேண்டுதலெனும் கரங்கள் கொண்டு மீட்க இயலவில்லை , 

வேண்டுதலெல்லாம் நிறைவேறினால் மனித வாழ்வில் மரணமில்லை 

விருப்பமின்றி விடை கொடுத்தோம் வேறு வழியில்லை 

விதிக்கப்பட்ட தொரு நிகழ்வு இறப்பென்பது புரியாமலில்லை 

மழை நின்றும் தூறலை நிறுத்த மறந்த மேகம் 

மடை திறந்த வெள்ளமென நினைவுகளில் சுழலும் மனம் 

புயல் கடந்ததால் நிலை குலைந்த வழிப் (வாழ்வுப் ) பாதைகள் 

பாதையில் பூத்திருப்பதோ கணக்கற்ற கண்ணீர்ப் பூக்கள்

 கண்ணீர்ப் பூக்களைப் பறித்துத் தொடுக்கிறேன் 

காணிக்கையாக்கி (உனக்கு ) நிதமொரு மாலை சூட்டுகிறேன்


No comments: