Tuesday, April 1, 2014

                       என் ஓய்வு  நாள் கவிதை......மார்ச் 30,2013

உறவு என்றொரு சொல்லுக்கு பிரிவு என்றொரு பொருளையும்
உழைப்பு என்றொரு கதைக்கு ஓய்வு என்றொரு முடிவையும்
எழுதி வைத்தானே அந்த இறைவன்
சுழலும்  வாழ்கை சக்கரத்தின் ஓட்டத்தை யாரால் மாற்றி அமைக்க இயலும்

என் இனிய லோதி பள்ளியே
உன்னுடன்  இருந்த இந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில்தான்
எத்தனை எத்தனை இனிமையான இறந்த கால நினைவுகள்
அத்தனையும் என் வருங்காலத்தின் சுவையான வரவுகள்

அழகிய பல பள்ளி விழாக்களை காண வைத்தாய்
பழக பல பண்பான தோழிகளை தந்து உதவினாய்
செயல் திறமை வெளிப்பட வாய்ப்புக்கள் வழங்கி ஊக்குவித்தாய்
பெயர் புகழ் பெற பாதை தன்னை திறந்து வைத்தாய்

எனக்குப் பிடித்த கணிதப் பாடத்தை கற்பிக்க வைத்தாய்
கனவில்தான் காண இயலும் எனக் கருதிய
கணிணிப்  பொறியினை கையாளும் கலையை
கற்கண்டென கற்றுணர வைத்தாய்

வானப் பெண்ணின் நாணப் புன்முறுவலான வானவில் போல
என் வாழ்வில் வண்ணங்களை தீட்டினாய்
உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என் நினைவை விட்டு என்றும் நீ நீங்கப் போவதில்லை



Sunday, December 20, 2009

kadughu #15

ஒரு நொடியில் இந்த உலகத்தை அழகாக்குவதில்
அந்த இறைவனை விட உயர்ந்தது
                                                      காதலன்/ காதலி பார்வை

kadughu # 14

யார் சொன்னது உன்னால் பேச இயலாதென்று ?
உன் பேச்சிற்கு தலை அசைக்கின்ற  செடி கொடிகள்  சாட்சி
                                                                                       காற்று 

kadughu #13

தண்ணீர் பெண்ணின் கரம் பட்டவுடன்
தன் தனித்தன்மையை இழக்கும் இறுமாப்பு இல்லாத  ஆண்                                                                                          நெருப்பு

kadughu # 12

வான வீதியில் அலைந்து திரிந்த வலியை
அவ்வப்பொழுது உலகிற்கு கண்ணீர் விட்டு உணர்த்தும் மேகம்
                                                                                                               மழை

kadughu # 11

வானம் கொண்டாடும் தீபாவளி பண்டிகை
                                                                  இடி,மின்னல்

Tuesday, December 15, 2009

kadughu # 10

சாட்சி இன்றி நடந்த ஒரு குற்றத்திற்கு
வக்கீல் இன்றி வாதம் இன்றி
நாள் கடந்து ஆண்டவன் அளிக்கும் தீர்ப்பு


 இரவின் இருட்டில் இருவர் செய்த தவற்றுக்கு
ஈர் இருபது வாரங்களில் இறைவன்  அளிக்கும் தீர்ப்பு
                                                                                                    
                                                                                                                              குழந்தை

kadughu # 9

பந்து வீசி பந்து பிடித்து பத்து விக்கெட்களை வீழ்த்தி
பதக்கம் பெரும் வீரர்களே
வாழ்க்கை மைதாநத்தில்   எத்தனை விக்கெட்களை நான் வீழ்த்தி இருப்பேன் !எனக்கு என்ன பரிசு தர போகிறீர்கள் ?
                                                                மரணம் 

Saturday, December 12, 2009

kadughu # 8

நினைவு வைரங்ளை வைத்து பூட்டியும்

 வாடகை கேட்காத அற்புத வங்கி கணக்கு

                                                               மனித மனம்

kadughu # 7

எடுத்து எடுத்து செலவழித்தாலும் அளவில் குறையாத
அற்புத வங்கி  கணக்கு
                                           நினைவுகள்