Saturday, February 7, 2026


                   வீடு

கல்லும் மண்ணும் கலந்து கட்டியதோர் வீடு,

நல் வாழ்வு வாழ்ந்ததற்கோர் இலக்கணம் அதில் உண்டு, 

வாசலில் வழிபட்டு புகுந்ததோர் வீடு,

சுவாசிக்கும் காற்றோ கதைகள் பல சொல்வதுண்டு ,

அறை, கதவு, தூண்,என்ற அம்சங்கள் கொண்ட வீடு,

நிறைவான எண்ணங்களை நினைவில் நிரப்பும் நிலை கண்டதுண்டு,

கண்ணெனக் கருத்தில் கொண்டு பேணிக் காத்ததோர் வீடு,

வண்ண ஓவியமென வாழ்வுதனை வடிவமைத்த சிறப்பும் அதற்குண்டு ,

எழிலுடன் அலங்கரித்துக் களித்ததொரு வீடு,

அழகிய நாட்கள் பலவற்றின் அடையாளம் அதிலுண்டு ,

ஆயிரம் ஆயிரம் சேர்த்து செலவழித்து அருமையுடன் வாழும் வீடு,

உயிர் வாழும் மனிதனின் உற்ற துணையில் ஒன்றெனப் பெருமையும் பெற்றதுண்டு

No comments: